மாமாங்கம் சிக்கன கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டிலான கௌரவிப்பு நிகழ்வு

மாமாங்கம் சிக்கன கூட்டுறவுசங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேசத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றமாணவர்களுக்கு கௌரவிப்புவழங்கும் நிகழ்வு நேற்று 2015.04.18ம் திகதி பிற்பகல் 4.00மணியளவில்; மாமாங்கம் சிக்கன கூட்டுறவுச் சங்க கட்டிடத்தில் தலைவர் எஸ். சோமசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அதிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாணசபைவிவசாயஅமைச்சர் கிருஸ்ணபிள்ளைதுரை ராஜசிங்கம்,பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஞானமுத்துகிருஸ்ணபிள்ளை,

மட்டக்களப்புமாநாகரசபைஆணையாளர் உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சங்கத்தின் உபதலைவர் உதயராஜ்,செயலாளர் குலேந்திரன்,பொருளாளர் திருமதிவீரலெட்சுமிமற்றும் உறுப்பினர்கள்,பிரதேசபொதுமக்கள் கௌரவிப்புபெறுவேர் எனபலர் கலந்து கொண்டனர்.

இதன் போதுகடந்த 2000மாம் ஆண்டிற்குபின்னர் இருந்துதற்போதுவரைக்கும் 05ம் ஆண்டுபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றமாணவர்கள் 05 பேர் அதிதிகளால் சின்னம் கொடுத்துகௌரவிக்கப்பட்டதுடன். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் ஆரம்பபிரிவுஅதிபர்,மட்டக்களப்புவின்சன்ட் மகளீர் தேசியபாடசாலையின் அதிபர் அதிதிகள் ஆகியோர் பிரதேசமக்களால் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.