சத்யசாயிபாபாவின் 04வது சமாதி தினத்தினை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
அற்புதங்கள் புரிந்து மக்களை நல்வழிப்படுத்திய மகானாக போற்றப்படும் சத்தியசாயிபாபா 2011ஆம் ஆண்டு சித்திரை மாதம் 19ஆம் திகதி சமாதியடைந்தார்.
உலகெங்கும் ஆன்மீக நிலையங்கள் ஊடாக மக்களை நல்வழிப்படுத்திவந்த பாபாவின் நான்காவது சமாதி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சாயி நிலையங்களில் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு தாமரைக்கேணி சாயி சமித்தியில் அதன் தலைவர் எஸ்.சாமித்தம்பி தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இன்று காலை மட்டக்களப்பு நகரில் இருந்து மாபெரும் ஊர்வலம் இடம்பெற்றது.பகவான் சத்தியசாயிபாபாவின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி முன்செல்ல இந்த ஊர்வலம் நடைபெற்றது.
சாயி சேவா சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரி.லோகிதகுமார் உட்பட சாயி நிலையங்களின் தலைவர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.