மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழான அபிவிருத்திப்பணிகள் ஆரம்ப நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
பட்டிருப்பு பகுதி மக்களின் நன்மை கருதி முன்பள்ளியை அமைக்கும் திட்டத்தின் கீழ் அதன் நிர்மாணப்பணிகள் இதன்போது ஆரம்பித்துவைக்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீரலி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அரசாங்கத்தின் நூறு நாள் விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள 45 கிராம சேவையாளர்கள் பிரிவுகளுக்கும் சுமார் 45 மில்லியன் ரூபா செலவில் இந்த அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.