க.பொ.த உயர்தரம் 2015 விஞ்ஞான, கணித பிரிவு மாணவர்களுக்கான இலவச செயலமர்

ஆறுதல் அமைப்பானது கல்வி அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.


அவற்றில் ஒரு கட்டமாக க.பொ.த உயர்தரம் 2015 ஆகஸ்ட் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் விஞ்ஞான, கணித பிரிவு மாணவர்களுக்கான “வினாவுக்கு விடையளிக்கும் வழிமுறைகள்” எனும் தலைப்பிலான இலவச செயலமர்வுகள் மட்டக்களப்பு, திருக்கோவில், கல்முனை ஆகிய இடங்களில் நடைபெற சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுடாக ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக ஆறுதல் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருமான திரு. சுந்தரம் டிவகலாலா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு கல்வி மாவட்ட வலயங்களைச் சேர்ந்த விஞ்ஞான, கணித பிரிவு மாணவர்களுக்கான செயலமர்வு எதிர்வரும் 2015 ஏப்ரல் 16, 17 ஆகிய இரு தினங்கள் மு.ப 08.30 தொடக்கம் பி.ப 04.30 வரை மட்ஃ வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் நடைபெறும்.

திருக்கோவில், அக்கரைப்பற்று ஆகிய வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான செயலமர்வு ஏப்ரல் 18, 19 ஆகிய இரு தினங்கள் மு.ப 08.30 தொடக்கம் பி.ப 04.30 வரை திகோஃ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மண்டபத்திலும் அதேவேளை கல்முனை, சம்மாந்துறை ஆகிய வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்ஃ மொஹமட் பாலிகா மகா வித்தியாலய மண்டபத்திலும் நடைபெறும்.

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியர்களினால் இச்செயலமர்வு நடாத்தப்பட இருப்பதோடு பங்குகொள்ளும் மாணவர்களுக்கு கையேடுகளும் வழங்கப்படும். எனவே 2015இல் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களும் உரிய காலத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

கடந்த வருடமும் நடாத்தபட்ட இதேபோன்ற செயலமர்வில் பல மாணவர்கள் பங்குபற்றி பயன்பெற்றமை குறிப்பித்தக்கதாகும்.