இலங்கை வரலாற்றில் முதலாவது இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை காத்தான்குடி நகரில் திறந்து வைக்கப்பட்டது.
கலாச்சார மரபுரிமைகள் அமைச்சின் அனுசரணையுடன் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள வழிகாட்டலில் பல மில்லியன் ரூபாய் செலவில் 4 மாடிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நூதனசாலையை மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார்.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியல், வர்த்தக, வணக்க வழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் பதிவாக வைக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், உணவு பழக்க வழக்கங்கள், வியாபார முறைகள், புராதன பள்ளிவாயல்கள், உட்பட பல நூறு முஸ்லிம் சமுகம் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன.