மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் களுதாவளையில் இன்று பிற்பகல் 12.30மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மீன்வியாபாரியான களுதாவளையை சேர்ந்த கே.குமாரசாமி(69வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
பிரதான வீதியில் மீன்பெட்டியுடன் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தபோது கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்றுகொண்டிருந்த காரில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர் உடனயாக மோதிய கார் மூலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
ஸ்தலத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.