புனித சதா சகாயமாதா தேவாலயத்தின் திருப்பாடுகள் நிகழ்வு

மட்டக்களப்பு ,மாமாங்கம் புனித சதா சகாயமாதா தேவாலயத்தின் திருப்பாடுகள் நிகழ்வு நேற்று இரவு கூழாவடி டிக்கோ விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.


கிறிஸ்த மக்களின் தவக்காலத்தின் இறுதியாக நடைபெற்றுவரும் நிகழ்வுகளின் கீழ் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

யேசு கிறிஸ்துவின் பிறப்பின் பெருமையினையும் உயிர்த்தெழும் தத்துவத்தினையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த திருப்பாடுகள் நிகழ்வு நடைபெற்றன.

புனித சதாசகாயமாதா தேவாலயத்தின் பங்குமக்களின் ஏற்பாட்டில் மிக நீண்ட மேடை அமைக்கப்பட்டு இந்த திருப்பாடு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக ஜெபம் செய்யப்பட்டு அதனைத்தொடர்ந்து புனித சதாசகாயமாதா தேவாலயத்தின் பங்குத்தந்தையினால் மங்கல விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந்த திருப்பாடுகள் நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தி;ன் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.