அமரர் க.ஆறுமுகத்தின் நினைவஞ்சலி நிகழ்வு

கிழக்கு மாகாணத்தின் புகழ்பெற்ற வெளியீட்டகமான விபுலம் வெளியீட்டகத்தின் உரிமையாளரும் எழுத்தாளர் சமூக சேவையாளர் என பரிணமித்த கன்னன்குடாவை சேர்ந்த அமரர் க.ஆறுமுகத்தின் நினைவஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்கள்,கலைஞர்கள் ஒன்றிணைந்து நடாத்திய இந்த நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எழுத்தாளர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன்,வெல்லவூர் கோபால்,எழுத்தாளரும் முன்னாள் வங்கி அதிகாரியுமான இக்பால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில்  அமரர் க.ஆறுமுகத்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுத்தாளர்கள் பலரின் நூல்களை வெளியிட்டுவைப்பதில் முன்னிறு செயற்பட்ட அமரர் க.ஆறுமுகத்தின் நினைவுகள் இங்கு பகிரப்பட்டன.

இந்த நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள், எழுத்தாளர்கள்,கலைஞர்கள் ,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.