மட்/களுதாவளை மகா வித்தியாலய பழைய மாணவர்களின் விசேட ஒன்றுகூடல் நிகழ்வொன்று இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இதோ.
மட்/களுதாவளை மகா வித்தியாலயம்
பழைய மாணவர்; ஒன்று கூடல்
பழைய மாணவ நண்பர்களே!......
பாடசாலைக் கால நிகழ்வுகள் என்றும் பசுமையானவை. அவற்றை மறப்பது எளிதானதல்ல. பாடசாலைக் கால நண்பர்கள் என்றும் நண்பர்களே. அவர்களில் சிலரை சந்திக்கஎமக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.எமது நினைவுகளை மீட்பதற்கும்,பள்ளிக்கால நண்பர்களை சந்திப்பதற்கும் சந்தர்ப்பங்களை எமது பிரதேசப் பாடசாலைகளில் பெற்றுக்கொள்ள முடிவதில்லை.இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக, எமது பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினரால் மிகப்பெரும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
இரவு விருந்துபசாரத்துடனான பழைய மாணவர்களுக்கான ஒன்றுகூடல்,
மேற்படி ஒன்றுகூடலில் கலந்துகொள்ள விரும்புவோர் பின்வரும் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி கீழ்க்காணும் முகவரிக்கு தபாலில் அனுப்பலாம் அல்லது நேரடியாகவும் கையளிக்கலாம். தங்களுடன் தங்கள் குடும்ப அங்கத்தவர்களையும் அழைத்து வருவதாயின் அவர்களும் வரவேற்கப்படுகின்றனர்.(முகவரி:- பழைய மாணவர் சங்கம், மட்ஃகளுதாவளை மகா வித்தியாலயம், களுதாவளை, மட்டக்களப்பு)
உறுப்பினர்ஒருவருக்கான நுழைவுக் கட்டணம் ரூபா.500.00 மாத்திரம். (குடும்ப உறுப்பினர்களின் 10 வயது தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 200 ரூபா அறவிடயப்படும் 10 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்) இதனடிப்படையில் கட்டணங்கள் செலுத்தப்படல் வேண்டும்.)
நுழைவுக்கட்டணம் நேரடியாகவோஅல்லது வங்கி மூலமாகவோசெலுத்தப்படலாம்.(பழைய மாணவர் சங்கத்தின் மக்கள் வங்கி க/கு இல: 190100140000959)
தொடர்புகளுக்கு,
திரு.சி.அலோசியஸ் (தலைவர்)- 0771737256திரு.கா.நிசாகரன் (செயலாளர்) -0776688844
திரு.செ.விக்கினேஸ்வரராஜா (பொருளாளர்)-077 8035453திரு.பே.காப்தீபன் - 077 2374025
திரு.ச.நேசராசா (கணக்காய்வாளர்)-077 0558773;
பழைய மாணவர் சங்கம், மட்ஃகளுதாவளை மகா வித்தியாலயம்
மட்ஃகளுதாவளை மகா வித்தியாலயம்
பழைய மாணவர்; ஒன்று கூடல்
விண்ணப்பப் படிவம்
முழுப் பெயர் :……………………………………………………....
விலாசம் :……………………………………………………...
………………………………………………………
தொழில் :……………………………………………………....
அலுவலக முகவரி :……………………………………………………....
தனிப்பட்ட தொலைபேசி இல :……………………………………………………....
தங்களுடன் வருவோரின் எண்ணிக்கை. (பங்குபற்ற விரும்பின்) :………………………………….
விண்ணப்பப் படிவத்தை ஒப்படைக்கும் போது வங்கியில் பணம் செலுத்திய பற்றுச் சீட்டையும் ஒப்படைக்கவும். அல்லது நேரடியாகப் பணம் செலுத்துவதாயின் விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பவரிடம் பணத்தைச் செலுத்தி பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளவும்.
விண்ணப்பப் படிவங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி 15.04.2015.
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களுக்கான அழைப்பிதழ்கள் தங்களால் குறிப்பிடப்படும் விலாசத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
(பழைய மாணவர் அல்லாதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன் செலுத்தப்பட்ட கட்டணங்கள் மீள வழங்கப்பட மாட்டாது)

