மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரிய பயிற்சியை பூர்த்திசெய்த ஆசிரியர் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு,  கலாசாலை மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது.


மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ஏ.எஸ்.யோகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

2013 – 2014ஆம் ஆண்டு பயிற்சியை பூர்த்திசெய்த 45 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. சமூக விஞ்ஞான பாடத்துக்கு  05 பேருக்கும்  ஆங்கிலப் பாடத்துக்கு  16 பேருக்கும்  விஞ்ஞானப் பாடத்துக்கு 11 பேருக்கும் கணித பாடத்துக்கு  13 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலாசாலையில் சிறந்த அடைவு மட்டங்களை பெற்றவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், விசேட அதிதியாக மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் உப பீடாதிபதி ரி.யுவனீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.