கிழக்கு மாகாண பாடசாலைகள் மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று மட்டக்களப்பு புனித தெரேசா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களமும் ஜி.ஐ.சற் அமைப்பும் இணைந்து பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய அனர்த்தமுகாமைத்துவம் மற்றும் வீதி போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கான பரிசளிப்பு நிகழ்வாக நடைபெற்றது.
ஜி.ஐ.சற் அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகரும் முன்னாள் கல்வி பணிப்பாளருமான எம்.பவளகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட கல்வித்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் ஆரம்பித்தில் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மாணவர்களினால் ஓழுங்குபடுத்தப்பட்டிருந்த அனர்த்த மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பிலான விசேட கண்காட்சி அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நிகழ்வுகள் புனித தெரேசா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி மாலதி பேரின்பநாதனின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.
இதன்போது மாணவர்களின் பல்வேறு விழிப்புணர் நாடகங்கள் மற்றும் நடன நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதிதிகளின் உரைகளும் நடைபெற்றது.
இறுதியாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் உள்ள கல்வி வலயங்களுக்களில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிய 128 மாணவர்கள் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.