மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து யுத்த காலத்திற்குள் இடம்பெயர்ந்த சிங்கள மக்களினை மீள குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களுடனான சந்திப்பு நேற்று பிற்பகல் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்,மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி, மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மத்திய மீள்குடியேற்ற அமைச்சின் உதவி செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜயந்திபுரம்,கறுவப்பங்கேணி ஆகிய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து சென்றதாக கருதப்படும் 64 குடும்பங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது மீள்குடியேற்றப்பட வேண்டியதாக தெரிவிக்கப்படும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
சட்ட பூர்வமான உரிமையினைக்கொண்டுள்ளவர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு உறுதியளிக்கப்பட்டது.