தன்னாமுனையில் 150 ஆண்டுகளாக தொடரும் வழிபாடு

மட்டக்களப்பு தன்னாமுனை புனித வளனார் ஆலயத்தில் வளாகத்தில் இன்று காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகை தலைமையில்  திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இத் திருப்பலியில்  பங்கு அருட் தந்தை ரமேஷ் கிறிஸ்டி, தன்னாமுனை மியாமி நிறுவன இயக்குனர் அருட் தந்தை இருதயராஜ்,  ஆகியோர் இணைந்து இத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.  இத் திருப்பலியினை தொடர்ந்து ஆலயத்தில் அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.

இந் அன்னதான நிகழ்வானது ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 19ஆம் திகதிக்கு பிறகு வருகின்ற ஞாயிறுக் கிழமை  தினத்தில் இவ் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்படுகின்றது.

இந் நிகழ்வானது கடந்த 149 ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றது.  தன்னாமுனை ஊரில் 150 ஆண்டுகளுக்கு முன் கொள்ளை நோயினால் பல குழந்தைகள் இறந்தால், இந் நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள 150ஆண்டுகளுக்கு முன் தன்னாமுனை வாழ்ந்த முன்னோர்களால் இவ் ஆலயத்தில் நேர்த்தி கடன் வைக்கப்பட்டதாம்,

அந்த நேர்த்தி கடனையே இத் தன்னாமுனை மக்கள் தொடர்ந்து 150ஆண்டுகளாக செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.