கிழக்கு மாகாண கல்வி நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் அகற்றப்படவேண்டும் -கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி

அரசியல் தலையீடுகள் என்பதை கிழக்கு மாகாணத்தின் கல்வி நிர்வாகத்தில் இருந்து அகப்பற்ப்படவேண்டும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி தெரிவித்தார்.


கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மாகாண கல்வி அமைச்சருக்கு மட்டக்களப்பில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

களணி பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் நண்பர்கள் வட்டம் இந்த வரவேற்பு நிகழ்வினை மட்டக்களப்பு சன்ஷயன் விடுதியில் அதன் தலைவர் பொன்.செல்வநாயகம் தலைமையில் நடத்தியது.

இதன்போது அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன் பழைய மாணவர்களினால் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் அமைச்சர், பட்டதாரிகள் நண்பர்கள் வட்டத்தினால் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டதுடன் வாழ்த்துப்பாவும் வழங்கப்பட்டது.