மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க நடவடிக்கையெடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களாக அம்பியுலன்ஸ் வண்டி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள ஆரையம்பதி முதல் கிரான்குளம் வரையிலான 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் இந்த மாவட்ட வைத்தியசாலை இயங்கிவருகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் வைத்தியசாலையில் இருந்த அம்பியுலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளாகியதை தொடர்ந்து காத்தான்குடி மற்றும் பாலமுனை ஆகிய வைத்தியசாலைகளில் இருந்தே அம்பியுலன்ஸ் வண்டி அவசர தேவைகளுக்காக வரவழைக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் தீ விபத்து காரணமாக காயமடைந்த யுவதி ஒருவரை உடனடியாக மேலதிக சிகிச்சைக்கு மட்டக்களப்புக்கு கொண்டுசெல்லமுடியாத நிலையிருந்ததாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் வைத்தியசாலையின் வைத்தியில் அவசர உதவியாக காத்தான்குடி மற்றும் பாலமுனை ஆகிய வைத்தியசாலையில் உடனடியாக அம்பியுலன்ஸ் வண்டி பெறப்படுவதனால் எதுவித கால தாமதங்களும் ஏற்படுவதில்லையென ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர் திருமதி மோகனம்பாள் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான அம்பியுலன்ஸ் வண்டி அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உரிய முறையில் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.