கிழக்கு மாகாணசபையில் இணைந்து ஆட்சியமைப்பதற்கு முன்வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் உள்ள 10 உறுப்பினர்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பு ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் இருந்த 10 உறுப்பினர்களே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் திருகோணமலையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்துக்கு சென்ற கிழக்கு மாகாணசபையில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினரே இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான உதுமாலெப்பை,விமலவீர திஸநாயக்க,வீரசேகர,அமீன் ஆகியோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு முன்வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் அழைப்பு விடுத்துள்ளதாக இந்த சந்திப்பில் கலந்துகொண்;ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இது தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படும் என இரா.சம்பந்தன் தெரிவித்ததாகவும் அந்த மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஆதரவு தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு உறுப்பினர்களில் பத்து பேர் தமது ஆதரவினை விலக்கிக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.