இது தொடர்பாக தெரியவருவதாவது,
கிழக்கின் முதற் பெண் சிற்றரசியான உலக நாச்சி வாழ்ந்த இடமாக ஆரையம்பதி கோவில்குளம் சிகரம் பகுதியில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமாகிய பூ.பிரசாந்தன் தலைமையில் ஆரையம்பதி ஆலயங்களின் ஒன்றியம்,ஆற்றல்பேரவை மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து கடந்த 2014.09.15 திகதி நிர்மானித்த வாள் ஏந்திய உலக நாச்சியின் திருவுருவச்சிலையின் வாள் ஏந்திய கையினையும்,வாள் பகுதியினையும் 15.03.2015 திகதி நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாதவர்கள் உடைத்து சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
உலக நாச்சி வாழ்ந்த இடமும்,காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடிபாடுகளும் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றது.
இப் பகுதியினை தொல் பொருள் திணைக்களம் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தி ஆய்வு செய்யுமாறு கோரி ஊர் மக்களாலும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டதனை அடுத்து இப்பகுதியில் அத்து மீறி அமைக்கப்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் வீட்டுத்திட்டங்கள் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபையினால் நிறுத்தப்பட்டதும் 2015 ஜனவரி ஜனாதிபதி ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மீண்டும் நிறுத்திவைக்கப்பட்ட வேலைகள் தொடர்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.