இலங்கையில் புற்றுநோயாளர் அதிகம் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டது.
மக்கள் மத்தியில் புற்றுநோயின் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புற்றுநோயாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இருந்து மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு செலான் வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த ஊர்வலத்தில் லயன்கழக பிரதிநிதிகள்,பாடசாலை மாணவர்கள்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதிய மாணவர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.
புற்றிநோய் தாக்கத்தில் அதிகளவில் மார்பு புற்றுநோயினால் அண்மைக்காலமாக பாதிக்கப்பட்டுவருவதாகவும் அது தொடர்பான விழிப்புணர்வும் இதன்போது வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட புற்றுநோயாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் என்.சயனொளிபவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.