கறுத்த கண்ணாடி அணிந்துகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பதற்கு எவரும் அருகதையில்லை. தங்களது கறுத்தக்கண்ணாடியை கழட்டிவிட்டு வெள்ளைக்கண்ணாடியை அணிந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை பார்க்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சர்வதேச மகளிர் தின மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இலங்கையில் தமிழ் தேசியத்துக்காக தந்தை செல்வாவின் மென்சக்தி போராட்டத்தில் பெண்களின் பங்கு அதிகளவில் இருந்தது.அதேபோன்று வடக்கு கிழக்கில் நடைபெற்ற மென் சக்தி போராட்டத்திலும் பெண்களின் பங்களிப்பானது ஒரு வரலாறாகவுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டமாக இருக்கலாம்,தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கலாம் இவைகள் அனைத்தும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை தகர்த்து பெண்களின் உரிமைகளை பாதுகாக்க போராடிவருகின்றோம்.
2009ஆண்டு மே மாதத்துக்கு பிறகு நடைபெற்ற சம்பவங்களை சனல்4 என்னும் தொலைக்காட்சி சேவை வெளிக்கொணர்ந்துவருகின்றது.அதில் பெண்கள் மிகவும் கேவலமான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.இசைப்பிரியா என்ற ஊடகப்பெண்ளும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தார் என்பதற்காக மிகவும் அசிங்கப்படுத்திய வரலாறு கடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு உள்ளது.
அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக எல்லாம் வந்துவிட்டது என்று நினைக்கின்றோம்.அதுஉண்மையல்ல.ஆட்சியில் ஆள் மாறியிருக்கின்றார்.ஆனால் எமக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.ஹம்பாந்தோட்டை முள்ளை பொலநறுவை முள்ளால் எடுத்துள்ளோம்.அவளவுதான் மாற்றம்.
முள்ளு முள்ளாகத்தான் உள்ளது.
தமிழ் தேசிய அரசியலை வென்றெடுப்பதற்காக மே மாதம் 19ஆம் திகதிக்கு பின்னர் நாங்கள் எட்டுப்பரீட்சை எழுதியிருக்கின்றோம்.எட்டுப்பரீட்சை என்பது எட்டு தேர்தலை நாங்கள் சந்தித்திருக்கின்றோம்.
விடுதலைப்போராட்டத்திற்கு பின்னர் முதலாவது எதிர்கொண்ட தேர்தல் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது.இதன்போது 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டோம்.நாங்கள் 14பேரும் அன்று தெரிவுசெய்யப்படாவிட்டிருந்தால் இந்த வெல்லாவெளி பிரதேசமும் சிங்கள குடியேற்றமாக மாறியிருக்கும்.
நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரித்ததன் காரணமாகவே இன்று நாங்கள் சர்வதேசத்தில் நின்றுகொண்டுள்ளோம்.அவ்வாறு வாக்களிக்காவிட்டிருந்தால் எமது மக்களை சோரம்போகச்செய்திருப்பார்கள். குடியேற்றங்களை செய்யும்போது வாயைபொத்துக்கொண்டு இருந்திருப்பார்கள்.அதனை தடுப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்செய்துகொண்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு காபட் வீதிகளுக்காகவோ,கொங்கிறீட் வீதிக்காகவோ,நாய்க்கழியில் களுவாஞ்சிகுடியில் வீதியை போடுவடுவதற்கு நாங்கள் தயாராகயில்லை.ஆனால் அபிவிருத்திசெய்யவேண்டும் என்பதில் நாங்கள் தயாராகவுள்ளோம்.ஆனால் அது எங்கள் நோக்கமல்ல.அரசியல்பணி என்பது நீண்ட பயணம்.
கிழக்கு மாகாணசபையில் நாங்கள் சில விட்டுக்கொடுப்புகளை செய்ததன் காரணமாக அதுதான் எங்கள் அரசியல் பயணம் என சிலர் நினைக்கின்றனர்.மாகாணசபை என்பது எங்கள் அரசியல் பணியின் ஒரு அங்கம்.எங்கள் இலட்சியம் என்பது நீண்டபயணம்.இந்த பயணத்தில் எட்டுப்பரீட்சையில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம்.தற்போது ஒன்பதாவது பரீட்சையை எதிர்கொண்டுள்ளோம்.இந்த ஒன்பதாவது பரீட்சையான பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் மூலம் தற்போது ஐ.நா.வின் வாசல்படியை தட்டிக்கொண்டிருக்கும் நாங்கள் உள்ளே செல்வதற்கான நிலையேற்படும்.
மாகாணசபை என்பது எமது மக்களின் அன்றாட தேவையினை பூர்த்திசெய்யக்கூடியதான தற்காலிக ஏற்பாடு ஆகும்.வடக்கு கிழக்கை பிரித்து தீர்வுத்திட்டத்தினைப்பெறும் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு துளிகூட இல்லை.
கிழக்கு மாகாணசபையினை பொறுத்தவரையில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகளவில் உள்ளனர்.தமிழ் உறுப்பினர்கள் குறைந்தளவிலேயே உள்ளனர்.இதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்தது.இந்த விடயங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு தமிpழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பதற்கு எவருக்கும் அருகதையில்லை.கறுப்புக்கண்ணாடியை கழட்டிவைத்துவிட்டு வெள்ளைக்கண்ணாடியை அணிந்துபார்த்தால் நாங்கள் பணி எதுவென்று புரியும்.