மீண்டும் பணியில் டாக்டர் திருக்குமார்

சுகவீன விடுமுறையில் சென்றிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.திருக்குமார் மீண்டும் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்தார்.


பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.திருக்குமார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து இடமாற்றலாகி சென்றுவிட்டதாக வெளிவரும் செய்திகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சுகவீனம் காரணமாக விடுமுறையில் இருந்தேன்.சிறிய சத்திரசிகிச்சையினை எதிர்கொண்டதன் காரணமாக விடுமுறையில் இருந்தேன். தற்போது பூரண சுகமடைந்த நிலையில் மீண்டும் எனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளேன்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.