கல்குடா வலயத்தில் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்த முடியாது

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் இந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

இதற்கான சுற்றுநிருபங்கள் வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வலயக்கல்விப்பணிப்பாளர் இதனை மீறும் தனியார் கல்வி நிலைய முகாமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.