கல்லடியில் பொன்.செல்வராசா எம்.பி.யின் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து –ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் கல்லடி, உப்போடையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு கல்லடி,உப்போடை சிவானந்தா வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதியை குறுக்கறுத்துச்செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளின் மீது மட்டக்களப்பில் இருந்து ஆரையம்பதி சென்ற பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவின் வான் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்தவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.