வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலத்தில் மகளிர் தின நிகழ்வு

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலத்தில் மகளிர் தின நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.


இன்று புதன்கிழமை நண்பகல் பாடசாலை அதிபர் கே.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்,கோட்டக்கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சமூகத்தில் பெண்களின் பங்கினை சிறு பராயங்களிலேயே ஊட்டுவதன் மூலம் சமூகத்தில் சமூக வன்முறைகளை குறைக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

பெண்கள் சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படவேண்டும் என்பதை பாடசாலைகளில் மாணவர்களின் மனங்களில் ஏற்படுத்துவதாக இந்த நிகழ்வுகள் அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியைகள், மாணவிகள், மாணவர்களின் பெற்றோர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.