கோடி அற்புதரின் அழியா வரம் பெற்ற புனித திருப்பண்டம் மக்கள் வணக்கத்துக்காக வெளியே வைப்பு

(லியோன்)      

குறைகள் தீர்க்கும் கோடி அற்புதரின் அழியா வரம் பெற்ற புனித திருப்பண்டம்  10.03.2015 செவ்வாய்க்கிழமை  மட்டக்களப்பு  புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் மக்களின் வணக்கத்திற்காக திருப்பண்ட பேழையினுள் இருந்து வெளியே வைக்கப்பட்டுள்ளது .


பக்தர்கள் புடை சூழும் புதுமைமிகு புனித அந்தோனியாரினது இறந்தும் அழியா புனித திருப்பண்டமானது 2010 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 12 ஆம் திகதி இத்தாலி நாட்டின் பாதுவா நகரிலிருந்து இலங்கை மண்ணுக்கு கொண்டு வரப்பட்டதுடன் ,

மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு அதில் ஒரு சிறு பகுதி திருப்பண்டம்  மக்களின் வணக்கத்திற்காக வழங்கப்பட்டது .