இந்த நாடு ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல -பாராளுமன்றஉறுப்பினர் பொன்.செல்வராசா

இந்தநாடுஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமானநாடு அல்ல. பல இன மக்கள் இருக்கின்றார்கள். இந்த இனங்களுக்குள் இன ரீதியாகவும், சமுக,பொருளாதார, வாழிவியல் எனபலவற்றில் போட்டிகள் இருக்கின்றன. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்புமாவட்டபாராளுமன்றஉறுப்பினர் பொன் செல்வராசாதெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட இருட்டுச்சோலை விஸ்ணு வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போதுமேலும் அவர் தெரிவிக்கையில்,

எமதுமாவட்டத்தைப் பொருத்தமட்டில் நாம் கல்விநிலையில் பாரியபின்னைடைவில் சென்றுகொண்டிருக்கின்றோம். எமதுசகோதர இன மக்களின் கல்விவலளமாகத் திகழும் மட்டக்களப்புமத்திகல்விவலயத்துடன் ஒப்பிடும் போதுநாம் எவ்வளவு தூரம் பின்நிற்கின்றோம் என்பதுபற்றிசற்றுசிந்தித்துப் பர்க்கவேண்டும்.

மட்டக்களப்புமத்தியைப் பொருத்தமட்டில் அதிலுள்ளபெரும்பாலானபாடசாலைகள் நகரப் பகுதிகளில் இருக்கின்றனஅத்துடன் பாடசாலைஅமைவுகள்,வசதிகள் அதினமாக இருக்கின்றன. இதனைநாம் பொறாமையுடன் கூறவில்லைஎமதுபிரதேசங்கள் பின்தங்கிபோயுள்ளதேஎன்றஆதங்கத்தில்தான் இவ்வாறு கூறுகின்றேன்.

அத்துடன் எமதுமாணவர்கள் செறிவும் குறைவாகவே இருக்கின்றன. ஏனெனில் எமது இனத்தின் பிள்ளைnடிபறுவீதம் குறைவாக இருப்பதுடன் எமதுமாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லும் வீதமும் குறைவாகவே இருக்கின்றன.

எமது இனம் கடந்த 30 ஆண்டுகாலயுதத்தில் சிக்குண்டுதவித்த இனம்,எயிர்,உடமை,வாழ்வாதாரம்,உறவுகள் எனசகலவற்றையும் இழந்தோம். இவ்வாறான இழப்புகளால் பலகுடும்பங்களில் சிறுவர்களேகுடும்பப் பொறுப்புகளைஏற்கநேரிட்டது இதனால் அச்சிறுவர்களுக்குபாடசாலைவருவதில் தடைஏற்பட்டுள்ளது.

இந்நிலைஎமதுசகோதர இன முஸ்லீம் மக்களுக்கு இல்லை. ஆவர்கள் பொருளாதாரரீதியில் சிறந்துவிளங்குகின்றார்கள். கடந்தபோரில் அவர்களுக்கும் ஓரளவு இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் எமது இனத்தினைப் போல் நூற்றுக்கு நூறு வீதம் இழப்புகளால் பாதிக்கப்படவில்லை.அவர்களதுகல்விநிலையும் பாதிக்கவில்லை.
இந்தநாடுஒரு இனத்திற்குமட்டும் சொந்தமானநாடுஅல்லபல இன மக்கள் இருக்கின்றார்கள். இந்த இனங்களுக்குள் இன ரீதியாகவும்,சமுக,பொருளாதார,வாழிவியல் எனபலவற்றில் போட்டிகள் இருக்கின்றன. இதில் நாமும் பங்குகொள்ளவேண்டியபபங்காளிகளாக இருக்கின்றோம். இவ்வாறுபோட்போடுவதற்குநாமும் அவர்களைப் போல் சமபலம் கொண்டவர்களாகமாறவேண்டும். நாம் சமபலம் பெறுவதற்கு இங்குபலதடைகள் இருக்கின்றன. அத்தடைகளைநாம் தகர்த்தெறியவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எனவேநாம் போட்டியுடையஒருநாட்டில் வாழ்கின்றோம் கடந்தகாலங்களில் இழந்தவற்றைஈடேற்றவேண்டும் எனதுடித்துக் கொண்டிருக்கின்றோம். இவற்றைப் பெறநாம் இன்னும் வேகநடைபோடவேண்டியவர்களாகமாற் வேண்டும். அப்போதுதான் நாம் மற்றவர்களுடன் போட்டிபோடுவதற்குரியசமபலத்தினைப் பெறமுடியும்.
எமதுதமிழ் இனம் பெருங்காய் வைத்தபானைபோலேஎப்போதும் இருந்துகொண்டிருக்கின்றதுஎப்போதும் எமதுமணம் மாறாது இருந்துகொண்டே இருக்கும்.

ஆண்டாண்டுகாலமாக நாம் எல்லவற்றிலும் சிற்நதுவிளங்கியவர்கள். அதிவிவேகமானவர்கள் என்பதைசர்வதேசத்திற்குவெளிக்காட்டியவர்கள் எமதுதமிழ் இனத்தினர். புடிப்பிலும் இதரவிடயங்களிலும் சர்வதேசநாடுகளைதிரும்பிப் பார்க்கவைத்தவர்கள். இதனாலேயேஆங்கிலேயர் காலத்தில் கொடிகட்டிப் பறந்தோம்.
இந்தநாட்டின் முதல் தேசியத் தலைவரும் ஒருதமிழன் தான்,முதல் நிர்வாகஅதிகாரியும் ஒருதமிழன்தான்.

ஆந்தளவுக்குஉயர்ந்திருந்ததுஎமதுசமுகம். இன்றுமற்றவர்களுக்குப் பின்னால் ஓடுகின்றஒருசமுகமான இருக்கின்றோம்.
இந்தநிலைமாறவேண்டும். நாமும் சமபலத்துடன் ஓடிவெல்லக்கூடியவர்களாகத் திகழவேண்டும். எனவேஎமதுகல்விநிலையைமுதண்மைபெறச் செய்யவேண்டும்.
முயற்சிதிருவினையாக்கும் எனஎம்மவர்கள் கூறியிருக்கின்றார்கள். எனவேமுயற்சிசெய்தால் நாம் எமதுநிலையைமீண்டும் பெறலாம்.
சென்றஅரசின் காலத்தில் நாம் அத்தனைநடவடிக்கைகளிலும் புறக்கணிக்கப்பட்டோம். தட்டிக்கேட்டும் பலன் இல்லைஅவற்றுக்குபதிலும் இல்லைஎன்றநிலையில்தான் எமக்கானகாலம் வரும் வரைகாத்திருந்தோம். அதற்கானகாலமும் வந்ததுஎம்மைபுறக்கணித்தவர்களைநாமும் புறக்கணித்துவீட்டுக்குஅனுப்பிவைத்தோம்.

இன்று ஓரளவுசுமுகமானகாலம் வந்திருக்கின்றதுஎன்றுசொல்லாம். இதிலும் சிலசறுக்குகள் முன்பு இருந்ததைப் போன்றே இன்னமும் இடம்பெறுகின்றன. அர்த்தமற்றகைதுகள் தொடர்கதையாகவே இருப்பதுடன் சிலவிடயங்கள் மாறாமல் இருக்கின்றன. அவற்றையும் நாம் பேசித் திர்ப்பதற்குநடவடிக்கைஎடுத்துவருகின்றோம்.

எனவே இப்போதுவந்திருக்கும் காலத்தைசிறந்தமுறையில் பயன்படுத்திஎமது இனம் சுதந்திரத்திற்குமுன்னர் எவ்வாறாகமுன்னேற்றநிலையில் இருந்தோமோஅவ்வாறானநிலையைமீண்டும் தோற்றுவிக்கவேண்டும்.