இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 151வது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு பிரதிப்பொலிஸ் மா அதிபர் காரியாலய முன்றிலில் அனுஸ்டிக்கப்பட்டது.
நாடெங்கிலும் இன்று பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் உபால் ஜயசிங்க தலையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் நிமால் வாகிச பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது பொலிஸ் கொடியேற்றப்பட்டு உயிரிழந்த பொலிஸாரின் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர்கள்,பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரிழந்த பொலிஸாரின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.