ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக மீண்டும் அரசரெட்னம் சசிதரன் நியமிக்கப்பட்டு;ள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் மாசிலாமணி தெரிவித்தார்.
நேற்று கொழும்பு ஸ்ரீகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் 25 மாவட்டங்களுக்குமான மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதன்படி யாழ் மாவட்டத்துக்கான அமைப்பாளராக பிரதியமைச்சர் விஜயகலாவும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அ.சசிகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலர் தாங்கள் ஐக்கிய தேசிய கட்சி மாவட்ட அமைப்பாளர் என்று கூறிக்கொண்டு திரிவதாகவும் அவர்கள் இனிமேலும் அவ்வாறான பதம் பாவித்தால் சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் கல்குடா தொகுதி அமைப்பாளர் மாசிலாமணி தெரிவித்தார்.