வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகஸ்தர் சங்கத்தின் 05வது பேராளர் மாநாடும் வருடாந்த பொதுக் கூட்டமும் இன்று (09) பிற்பகல் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் சங்கத்தின் வடக்கு கிழக்குமாகாண இணைப்பாளரும் கிழக்கு பிராந்தியப் பொருளாளர் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை அணையாளர் உதயகுமார் அவர்கள் கலந்துகொண்டதோடு கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலன புலனாய்வு அதிகாரி அசீஸ் வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் தினேஸ்குமார் ஆகியோருடன் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சங்கத்தின் தலைமைச் செயலக புதிய நிர்வாகமும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய நிர்வாகங்களும் தெரிவு செய்யப்ட்டமை குறிப்பிடத்தக்கது.