நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00மணியளவில் கட்டக்காடு,வயல்பகுதியில் உள்ள வாடியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த சித்தாண்டியை சேர்ந்த எஸ்.முரளிதரன்(26வயது) என்பவரே தாக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக அண்மையில் சித்தாண்டி பகுதியில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு இவர் தலைமை தாங்கிவந்ததாகவும் அதன் காரணமாகவே இவர் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.