கல்லடி சுவாமி விபுலானந்தா இசைநடனக்கல்லூரி மூன்றாம் வருட மாணவி வைத்தியசாலையில் உயிரிழப்பு (திருத்தம்)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு,கல்லடி சுவாமி விபுலானந்தா இசைநடனக்கல்லூரியில் கல்வி பயின்றுவந்த மாணவி ஒருவர் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.


இன்று காலை 8.00மணியளில் மட்டக்களப்பு,கல்லடி சுவாமி விபுலானந்தா இசைநடனக்கல்லூரியில் சங்கீதம் கற்றுவரும் மூன்றாம் வருட மாணவியான முல்லைத்தீவு,மல்லாவி,யோகபுரத்தினை சேர்ந்த சி.பர்மிலா (24வயது)என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பு,கல்லடி சுவாமி விபுலானந்தா இசைநடனக்கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இந்த மாணவி இரு தினங்களுக்கு முன்னர் வயற்றுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.