மட்டக்களப்பு,வாவிக்கரை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு முதலமைச்சரை மாற்றிக்கொண்டு மீண்டும் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளது.
இதில் பல கட்சிகளின் குழப்பங்கள்,ஊடகங்களில் வந்த அறிக்கைகள் மக்களை குழப்பியுள்ளது. கிழக்கு மாகாணசபையில் தமிழ் ஒருவரை முதலமைச்சராக்கவேண்டும் என கட்சிகளினால் ஊடகங்கள் ஊடாக முன்வைக்கப்பட்டது.
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர்; 12ஆம் திகதி புதிதாக மாகாணசபை கூடியபொழுது நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடமும் நீங்கள் ஆட்சி அமையுங்கள் நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கிறோம் என்று கூறினோம்.அந்தளவுக்கு ஒரு வெற்றிக்களிப்பில் மாகாணசபைக்கு வந்தார்கள்.
அந்த இரண்டு பிரதான கட்சிகளும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இணைந்து செயலாற்றியிருந்தாலும் பின்னர் வந்த நாட்களில் அந்த கூட்டிணை மாகாணத்தில் ஏற்படுத்த முடியாமல்போயுள்ளது.குறிப்பாக மத்தியிலே கூட்டும் மாகாணத்தில் ஒரு விரோத போக்கும் ஏற்பட்டுள்ளது.இரு தலைவர்கள் மத்தியிலும் இணக்கப்பாடு இல்லாமல்போனது கவலைக்குரிய விடயமாகும்.
எங்களைப்பொறுத்தவரையில் மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளவிடயம் இது மனங்களுக்குள் பற்றியெரியும் விடயமாக மாறியுள்ளது.இது முரண்பாட்டை தோற்றுவித்து ஆங்காங்கே வசைபாடும் நிலைக்கு மாறியுள்ளது.இது பேச்சளவில் முடிவுக்குகொண்டுவரப்படவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.வன்முறையாக மாறி கலவரங்களாக மாறிவிடக்கூடாது.அதற்கு யாரும் முயற்சிகளை எடுக்ககூடாது.
இதில் முஸ்லிம் காங்கிரசின் முடிவுகளில் பல விமர்சனங்கள் உள்ளது.என்னிடமும் உள்ளது.மத்தியில் செய்ததுபோன்று மாகாணத்திலும் கூட்டாட்சியை ஏற்படுத்தியிருக்கலாம்.அதனையும் தாண்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனுமானங்கள் பிழைத்துப்போயுள்ளன.
புதிய ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஆட்சியை குழப்பவேண்டியதில்லை என்ற எண்ணக்கருவுடன் இருந்த காரணத்தினால் சட்ட ரீதியானதும் நடைமுறைச்சாத்தியமாகவும் உள்ள முறைமையை பலப்படுத்தவேண்டும் என்பற்காக நானும் ஒப்புதல் ஒப்பம் இட்டேன்.அதன்கீழ் புதிய முதலமைச்சர் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் எஞ்சியுள்ள அமைச்சர்களையும் தெரிவுசெய்யவுள்ளனர்.
மாகாணசபை முறைமையானது சிறுபான்மை மக்களுக்காக கொண்டுவரப்பட்டது.இதனைஅரசாங்கம் மாறியுள்ள நிலையில் சட்ட ரீதியான வலுவான மாகாணசபையாக மாற்றுவதற்கு எம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.
முன்னாள் முதலமைச்சராக நஜீப் ஏ மஜித்தைவிட சிறந்த முறையில் சேவையாற்றக்கூடியவராக தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள ஹபீர் காசிம் அகமட் அவர்களை பார்க்கிறேன்.அவருடன் இணைந்து முடிந்தவரையில் பணியாற்றுவோம்.தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடுத்துநிறுத்துவதற்குமான பணியை மேற்கொள்வோம்.
மக்களை குழப்பும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சட்டத்துக்கு முரணாண தோற்றப்பாட்டில் காட்டப்பட்டுகின்றது.கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.தனிநாட்டை கோரினர்.அதுசாத்தியமில்லை எ;னற காரணத்தினால் மாகாணசபை ஊடாக அதிகார பகிர்வுகொண்டுவரப்பட்டது.இந்த அதிகார பகிர்வுமுறைமை சிறுபான்மை மக்களுக்கான தீர்வாக கொண்டுவரப்பட்டது.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழர்கள்,முஸ்லிம்கள் வாழ்கின்றோம்.இந்த மாகாணம் அனைவருக்கும் உரித்தான மாகாணம்.முஸ்லிம்கள் தமிழர்களை ஆளமுடியும்.ஆனால் இங்கு சமத்துவம் பேணப்படவேண்டும்.முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜித் காலப்பகுதியில் இந்த சமத்தும் மற்றும் அபிவிருத்திப்பிரச்சினை எழுந்திருந்தது.இதுபோன்ற விமர்சனங்களை நிறுத்திக்கொண்டு முன்னேறவேண்டிய பொறுப்பு இருக்கின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் மத்தியில் வந்த கூட்டை சரியானமுறையில் பயன்படுத்தி நல்லாட்சியை ஏற்படுத்தியிருக்கமுடியும்.இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றுள்ளது கவலையளித்தாலும் கூட முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளதை சட்டரீதியாக,ஜனநாயக மரபு ரீதியாக,நல்லாட்சி ரீதியாக சிந்திப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.அவர்களின் ஆதரவினை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தனிப்பட்ட அரசியலுக்கு அப்பால் தற்போது அமைந்துள்ள மாகாணசபையினை அனைவரும் இணைந்து வலுவாக,நியாயமிக்க சபையாக மாற்றவேண்டும் என்றார்.