மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்கதும் முன்னூரு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்ததுமான இந்த ஆலயத்தின் மஹா கும்பாபிசேக கிரியைகள் வியாழக்கிழமை ஆரம்பமானது.
மகா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு சனிக்கிழமை காலை முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை நடைபெற்றது.இதன்போது ஆயிரக்கணக்கான அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தினர்.
கும்பாபிசேக கிரியைகள் யாவும் வவுனியா குருமண்காடு ஸ்ரீவிநாயகர் ஆலய பிரதம குரு ஆகம கிரியா பாவலர்,சிவாச்சாரிய திலகம்,ஆகம கிரியாமணி சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் கலந்துகொண்ட சிவாச்சாரியர்களினால் நடாத்தப்பட்டது.
இன்று திங்கட்கிழமை காலை 6.50தொடக்கம் 7.25மணி வரையுள்ள சுபவேளையிவல் மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது.
இன்று காலை விசேட கிரியைகள்,யாகம்,கும்ப பூஜை என்பன நடைபெற்று கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல தூபி கும்பாபிசேகம் செய்யப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து இராஜகோபுரம் மற்றும் பரிபால மூர்த்திகளின் ஆலயங்களும் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.
இந்த கும்பாபிசேக நிகழ்வின்போது பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.