தாண்டவன்வெளி சுதந்திரன் விளையாட்டுக்கழகத்தினால் நடத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட தாண்டவன்வெளி சுதந்திரன் விளையாட்டுக்கழகம் ஏற்பாடுசெய்த சைக்கிள் ஓட்டம் மற்றும் மரதன் ஓட்ட போட்டி என்பன நடத்தப்பட்டது.


தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதாவின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வில் தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ் ரொபட் பங்குகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இதனைத்தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டதுடன் மாலை பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.