காக்காச்சிவட்டையில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு

(தவக்குமார்)

வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவட்டை விளாவடிக் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய குணவர்த்தன-சாந்தினி என்னவர் திங்கட்கிழமை இரவு 9.00 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில ;சடலமாக  மீட்கப்பட்டார்.


விளாவடியில் உள்ள தனது வீட்டு அறையில் உள்ள வளையில் தூங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் உடனே வெல்லாவெளிப் பொலிஸாருக்கு பிரதேச வாசிகள் தெரிவித்ததாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் திருமணமாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தூக்கில் காணப்படடதாகவும்  இவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கா களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கும் படி களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரின் மரணத்திற்கான காரணம் பற்றிய விசாரணைகளை வெல்லாவெளிப் பொலிஸார் நடத்திவருகின்றனர்.