சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கிளிவெட்டி முகாம் முன்பாக மில் இந்த போராட்டம் நடைபெற்றது..
பட்டித்திடல், மணல்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் மக்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
புதிய அரசாங்கத்தின் நூறுநாள் திட்டத்தின்கீ்ழ் தமது மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்த்தபோதிலும் அது கைகூடவில்லை என கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்கள் கூறினர்.
சம்பூரில் உள்ள சொந்த காணிகளில் தம்மை குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.