இந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 361பேர் டெங்கினால் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் 361பேர் டெங்கு நோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.


அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தினை அச்சுறுத்திவரும் டெங்கு தாக்கம் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி,ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை,ஓட்டமாவடி ஆகிய பகுதிகளிலேயே டெங்கு தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்துப்பகுதிகளிலும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இன்று வரை சுமார் மூன்று பேர் டெங்கு தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

நுளம்பு பெருக்கம் உள்ள பகுதிகள் இனங்காணப்பட்டு அப்பகுதியில் துப்புரவு நடவடிக்கைகள்,மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பிராந்திய சுகாதார அதிகாரிகள் காரியாலயம் ஊடாக விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தொடர்ந்து பரிசோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் டாக்டர் சதுர்முகம்