மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலயம் (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டமானது எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் கே.மனோராஜ் தலைமையில் பாடசாலை வளாகத்திலுள்ள சுவாமி நடராஜானந்தா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி கூட்டத்திற்கு சங்கத்தின் பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைப்பதோடு சங்கத்தில் இதுவரை அங்கத்துவம் பெற்றுக்கொள்ளாத அனைவரையும் அன்றைய தினம் அங்கத்துவத்தினைப் பெற்றுக்கொள்ளுமாறும் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைவரினதும் பங்கேற்பு இவ்விசேட பொதுக்கூட்டத்திற்கும், பாடசாலை மற்றும் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கும் வளம் சேர்ப்பதாய் அமையும் என்று அதிபர் மோகன்ராஜ் தெரிவித்தார்.
மேலதிக தொடர்புகளுக்கு சு. பவானந்தராஜா – 0773760097, து.பிரதீபன் - 0778436572