கடந்த மாதம் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் நடைபெற்ற நிலையில் மண்டலாபிசேகம் நடைபெற்றுவந்தது.
பன்னெடுங்காலம் இப்பகுதி மக்களின் வழிபாட்டுத்தலமாகவும் தமிழர்களின் பண்பாடுகளை சுமந்ததாகவும் தொன்றுதொட்டு தமிழ் மக்கள் மத்தியில் பிணைந்துள்ளது.
இன்று காலை மாவிலங்குதுறை சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து அடியார்கள் பால்குடம் எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது.
சித்தவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பூசையினை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்களும் ஆண்களும் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக ஸ்ரீமாகாளியம்மன் ஆலயம் வரை வந்தனர்.
அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் சிவஸ்ரீ உ.ஜெயதீஸ்வர சர்மாவின் தலைமையில் சிவாச்சாரியர்களினால் கிரியைகள் நடத்தப்பட்டன.
விசேட ஹோம பூஜை நடத்தப்பட்டதுடன் சங்கு மற்றும் மண்டாலாபிசேக பிரதான கும்பத்துக்கும் விசேட பூஜைகள் நடத்தப்பட்டன.
இதன்போது மூலமூர்த்தியாகிய அன்னைக்கு விசேட அபிசேகம் செய்யப்பட்டதுடன்அடியார்கள் கொண்டுவந்த பால்கொண்டும் அபிசேகம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பிரதான கும்பம் அடியார்கள் புடை சூழ ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்பாளுக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து விசேட பூஜைகளும் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டதுடன் சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டதுடன் ஆன்மீக நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.