ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் புதிய மாணவ தலைவிகளுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு

(லியோன்,சுஜி)

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் புதிய மாணவ தலைவிகளுக்கு சின்னம் அணிவித்தல், பழைய மாணவ தலைவிகளை கௌரவித்தல் புதிய பயிற்சி மாணவ தலைவிகளை வாழ்த்துதல் போன்ற நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் அவர்களின் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று (13) இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் வி.லவகுமார் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலைஅபிவிருத்தி குழுவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது புதிய மாணவ தலைவிகளுக்கு பிரதம அதிதியினால் சின்னம் அணிந்து கௌரவிக்கப்பட்டதுடன் பழைய மாணவ தலைவிகளுக்கான கௌரவிப்பும் புதிய பயிற்சி மாணவ தலைவிகளுக்கு கௌரவிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.