மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க விஜயம்

மட்டக்களப்பு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனர் நிர்மாணப்பணிகளை விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேரில் சென்று பார்வையிட்டார்.


பயணிகள் விமானசேவையினை நடாத்தும்பொருட்டு மட்டக்களப்பு விமான நிலையத்தில் விமான ஓடுபாதை மற்றும் பயணிகள் நிலையம் என்பன அமைக்கப்பட்டுவருகின்றன.

கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி வேலைத்திட்டங்கள் தற்போது முடிவுறும் நிலையினை எட்டியுள்ளது.

விமானப்படை முகாமாக செயற்பட்டுவரும் இந்த விமானத்தளத்தில் உள்ளூர் விமானசேவைகள் நடைபெற்றுவரும் நிலையில் சர்வதேசம் இருந்துவரும் பிரயாணிகள் நேரடியாக மட்டக்களப்புக்கு நேரடியாக வரும் வகையில் இந்த புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் கீழ் சுமார் 400மில்லியன் ரூபா  செலவில் இந்த விமான நிலைய புனரமைப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இங்கு விஜயம் செய்த அமைச்சரை மட்டக்களப்பு விமானப்படை கட்டளை அதிகாரி கப்டன் அத்துல வரவேற்றதுடன் நடைபெற்றுவரும் நிர்மாணப்பணிகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.