சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு நள்ளிரவு விசேட பூஜைகள் நடைபெற்றன.
நள்ளிரவு 12.00மணியளவில் விசேட ஹோம பூஜை நடத்தப்பட்டதுடன் மூல மூர்த்திக்கு விசேட அபிசேகமும் நடத்தப்பட்டது.அபிசேகத்தினை தொடர்ந்து கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல மூர்த்திக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் விசேட பூஜையும் நடத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சிவன் பார்வதிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன் உள் வீதியுலாவும் நடைபெற்றது.
சிவராத்திரியை ஒட்டி பக்தி பாடல்கள் பாடும் நிகழ்வு நடைபெற்றதுடன் கையலாய தரிசனமும் காண்பிக்கப்பட்டது.
இறுதியாக இன்று அதிகாலை நடைபெற்ற தீர்த்த உற்சவத்துடன் சிவராத்திரி நிகழ்வுகள் நிறைவுபெற்றன.