மெர்கண்டைல் தனியார் பாதுகாப்பு நிறுவன உத்தியோகத்தர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட மெர்கண்டைல் தனியார் பாதுகாப்பு நிறுவன உத்தியோகத்தர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு  மட்டக்களப்பு மாவட்ட மெர்கண்டைல் பாதுகாப்பு நிறுவன சேவைகளின் பொறுப்பதிகாரி ஜெயசந்திரன் தலைமையில் மட்டக்களப்பு அலுவலக உத்தியோகத்தர் திருமதி சீத்தா .ஜெயசந்திரனின் ஒழுங்கமைப்பில் இன்று காலை 10.00 மணியளவில் திராய்மடு  அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது .


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்பாணம் நல்லூர் மெர்கண்டைல் தனியார் பாதுகாப்பு தலைமை காரியாலய பிரதம  பணிப்பாளர்  வி .சுகுமாரன் கலந்துகொண்டார் .

ஆரம்ப நிகழ்வாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் பணிப்பாளருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன்  அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் தேசிய  மற்றும் மெர்கண்டைல் நிறுவன கீதங்கள் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது . நிகழ்விலே பணிப்பாளரினால் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு  தமது அலுவலக கடமை நேரங்களில் தமது சேவைகள் தொடர்பாக தெளிவூட்டல் விசேட உரைகள்  இடம்பெற்றது .

இதனை தொடர்ந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் இவர்களின் பிள்ளைகளின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது . அதனை தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசில்கள் வழங்கப்பட்டு விருந்து உபசார நிகழ்வுடன் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு நிறைவுபெற்றது .