திருகோணமலைக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்

வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கான விஜயமொன்றை மேற கொண்டுள்ள பாதுகாப்பு துறை இராஜங்க அமைச்சர் ரூவான்  விஜயரத்ன  இன்று ஞாயிற்றுக்கிழமை  கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து பாதுகாப்பு  நிலவரங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.


திருகோணமலையிலுள்ள 22வது இராணுவ படைப்பிரிவு தலைமையத்தில் முப்படையினர் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்பு துறை இராஜங்க அமைச்சர் ருவான் விஜயரத்ன. தனது உரையில்,

உள் நாட்டில்  தற்போதுள்ள பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க தான் தயார் இல்லை .

சில நாடுகளில்    இலங்கை பாதுகாப்பு  பாதுகாப்பு படை யினருக்கு வழங்ப்பட்டிருந்த  பயிற்ச்சிக்கான வாய்ப்புகள்  மட்டுப்படுத்பட்டுள்ளது. அவற்றை நீக்கதேவையான அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்படும்.

மேற்கு நாடுகளுடன் கட்டியெழுப்பப்படும் இராஜதந்திர உறவுகளை; கொண்டு எதிர்காலத்தில் இலங்கை பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஐ. நா  அமைதிப்படையில் கூடுதல் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் தனது உரையில் வெளிப்படுத்தினார்.