மட்டக்களப்பு தாண்டவண்வெளி ஜோசப்வாஸ் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

(சுஜி)

மட்டக்களப்புதாண்டவண்வெளி ஜோசப்வாஸ் வித்தியாலயத்தின்வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டி நேற்று பாடசாலை அதிபர் சுதாகரன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கலந்துகொண்டதுடன். ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிமனையின் உடற்கல்வி உதவிப் பணிப்பாளர், தாண்டவன ;வெளிபங்குத் தந்தை மற்றும் பல அதிதிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனபலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறுவர்களின் விளையாட்டுப் போட்டியினை உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் ஆரம்பித்து வைக்க மாணவர்களினால் பாண்டுவாத்தியம், அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடைப் போட்டி ,ஆசிரியர்கள ;,பழையமாணவர்கள்,பெற்றோர்களுக்கான போட்டிகள் உட்பட இத ரவிளையாட்டுப் போட்டிகள் என பல அம்சங்கள் இடம்பெற்றன.

அத்துடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்குபரிசில்கள் வெற்றிக்கிண்ணங்கள் என்பன வழங்கப்பட்டதோடு அதிதிகளுக்கும் நினைவுச் சின்னம் வழங்கிகௌரவம் இடம்பெற்றது.

இவ்விளையாட்டுப் போட்டியில் 196 புள்ளிகளைப் பெற்று ஜோசப் பொன்னையா இல்லத்தினர் முதலிடத்தினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தகது.