தென்னாபிரிக்காவில் கருப்பினமக்களின் விடுதலைக்காகப் போராடிய நெல்சன்மண்டேலா அவர்களை இந்த உலகம் பயங்கரவாதி எனறு சொன்னதில்லை விடுதலைவீரர் என்றே கூறுகின்றது. அதுபோலவே எமதுமக்களின் விடுதலைக்காக போராடிய எமது இளைஞர்களும் பயங்கரவாதிகள் அல்ல விடுதலை வீரர்கள் என்றே உச்சரிக்கப்படவேண்டியவர்கள் என்றுத மிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர் பொன் செல்வராசாஅவர்கள் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றவருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போதுஅவர் மேலும் தெரிவிக்கையில்,
எமதுமாவட்டத்தில் கல்விநிலைபற்றிநாம் சிந்திக்கின்றபோது எமது மாவட்டம் கல்வியில் சற்று பின்னடைந்திருப்பதைநாம் காணலாம். எமதுதமிழ் சமுகம் கடந்த 30 வருடங்களுக்கும் மேல் இடம்பெற்றகோர யுத்தத்தினால் கல்வியைமட்டுமல்லாது எமது வாழ்வாதாரம், சொத்துக்கள், உயிர்கள் அனைத்தையும் இழந்தோம். 2009ம் ஆண்டுகளில் இந்தயுத்தம் ஒருமௌனத்தை அடைந்தாலும் அதன் பின்னும் எமது இளைஞர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்பட்டனர்.
எமது இளைஞர்கள் பயங்கரவாதிகள் அல்ல. ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடியவர்களை ஒருநாளும் பயங்கரவாதிகளாக கணிக்கமுடியாது. தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த நெல்சன் மண்டேலா அவர்கள் அவரது மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். இறுதியில் பேச்சுவதார்த்தையின் மூலம் அந்தநாட்டில் தமது இனத்தின் அரசியலைமேம்படுத்திதமக்கென்றொரு அரசாங்கத்தை ஏற்படுத்திய பெருமை நெல்சன்மண்டேலா அவர்களையேசாரும்.
நெல்சன்மண்டேலா அவர்களை உலகத்தில் வாழும் எந்த சமுகத்தவரும் பயங்கரவாதிஎன்று சொல்லவில்லை. ஒரு விடுதலைவீரர் என்றே இந் தஉலகம் கூறுகின்றது. அதுபோலவே இலங்கைத் தீவில் தமது இனத்திற்கு உரிமை கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பயங்கரவாதிகளாக கருதப்படமுடியாது அவர்களும் விடுதலைவீரர்கள் என்றே உச்சரிக்கப்படவேண்டியவர்கள்.
ஆனால் 2009களில் இந்தக் கொடூரப் போர் மௌனித்தாலும் அதனைத் தொடர்ந்து உண்மையான பயங்கரவாதம் எம்மை சூழ்ந்தது. அதுவே அரச பயங்கரவாதம். இந்த பயங்கரவாதத்தின் மூலம் கடந்தமாதம் 8ம் திகதி வரை எத்தனை இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர் எத்தனை எத்தனைபேர் காணாமற் போனார்கள். அவர்கள் இருக்கின்றார்களா இல்லையாஎன அறியாமல் எத்தனைபெற்றோர்கள் எத்தனை மனைவியர்கள் அவர்களை பலமுகாம்களுக்குச் சென்றுதேடித் தேடிஅலைவதைநாம் காண்கின்றோம்.
இந்தவகையில் அரசபயங்கரவாதம் ஒன்று இந்தநாட்டில் இருந்தது என்பதை நாம் மறந்துவிடமுடியாது. இன்று ஓரளவிற்கு இந்த அரசபயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட அதற்கான தீர்வுகள் செயற்படுத்தப்படும் என்ற ஒருபச்சைக் கொடி புதியஅரசாங்கத்தாலும் புதிய ஜனாதிபதியினாலும் கட்டப்பட்ருக்கின்றது. இது நடக்குமாக நடக்காமல் விடுமாஎன்பதைநாம் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.
எனவே சென்றமாதத்தில் இருந்து ஏற்பட்டிருக்கின்றஅரசியல் மாற்றம் ஓரளவு நாம் பயங்கரவாதம் இல்லாத ஒருவேட்கையில் நாம் இருந்துகொண்டிருப்பதை நாங்களாகவே உணர்கின்றோம்.
கடந்தஆட்சியைமாற்றவேண்டும் என்பதில் சிறுபாண்மை இனம் மிகவும் உத்வேகமாக இருந்தமைகுறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் என்றும் இல்லாதவாறு மக்கள் மத்தியில் தேர்தல் ஆர்வம் இருந்தது. இலங்கையில் அதிகூடியதேர்தல் பதிவு மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஏற்பட்டிருந்தது.
சிறுபாண்மை இனம் எங்கெங்கெல்லாம் வாழ்ந்தார்களோஅங்கெல்லாம் வாக்குப்பதிவு கூடுதலாக இருந்ததைநாம் அவதானித்தோம். இந்தநிலையில் இன்றுஒருபயங்கரவாதம் இல்லாதஒருசமாதானத்தைநாம் ஓரளவிற்கு அடைந்திருக்கின்றோம்.
ஆனால் உண்மையானசமாதானம் இந்தநாட்டில் மலரவேண்டுமாயின் தமிழர்களின் அபிலாசைகள் அத்தனையும் தீர்க்கப்படவேண்டும். இவை தீர்க்கப்படவில்லை என்ற காரணத்தினால்தான் இந்த நாடுபற்றி எரிந்தது. மாறிமாறிவந்தஅரசாங்கங்கள் தமிழர்களைஏமாற்றிப் பிழைத்தார்களேதவிரஅவர்கள் எமதுபிரச்சினைகளைதிர்க்கமறுத்துவிட்டார்கள்.
அவ்வாறுதீர்க்கப்பட்டிருந்தால் 2009ல் முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கானஉயிர்களைநாம் இழந்திருக்கமாட்டோம்.
எனவேஅந்தஅபிலாசைகள் தீரும் வரைஅதுஎந்தஅரசாங்கமாக இருந்தாலும் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புஅகிம்சைவழியில் போராடிக் கொண்டிருக்கும். தமிழர்கள் அச்சமின்றிஒருஅதிகாரத்தினைப் பெறும் வரைநாம் ஓயமாட்டோம்.
நாம் தனிநாடுகேட்கவில்லை நாம் கேட்பது எல்லாம் இந்தநாட்டில் வாழுகின்ற தமிழினம் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் எது விதபயமும் இன்றி தாங்கள் வாழ்வதற்குரியஅதிகாரப் பரவலாக்கலையேநாம் கேட்கின்றோம். அந்தஅதிகாரப் பரவலாக்கல் எந்தவழிமுறையில் அமைந்தாலும் அதைநாங்கள் பெறுவதற்குதயாராக இருக்கின்றோம் என்றுதெரிவித்தார்.