முகத்துவாரம் கடல் பகுதியில் 1000 கிலோ எடையுடைய திருக்கை மீன் சிக்கியது

மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் பாரிய திருக்கை மீன் ஒன்று இன்று காலை பிடிபட்டுள்ளது.


முகத்துவாரம் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையிலேயே இந்த பாரிய திருக்கை மீன் சிக்கியுள்ளது.

சுமார் 1000 கிலோ எடையுடைய இந்த மீன் கொம்பு திருக்கை இனத்தினை சேர்ந்தது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் தொழிலாளர்கள் மீன்பிடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர்.

பிடிக்கப்பட்ட இந்த மீன் சுமார் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யமுடியும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு கடல்பகுதியில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வலைகளில் பெரிய மீன்கள் பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.