வாவிக்கரையினை தூய்மைப்படுத்தும் மட்டக்களப்பு மாநகரசபை

மட்டக்களப்பு வாவியினை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் அவற்றினை தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமாரின் உத்தரவிற்கு அமைய வாவிக்கரை ஓரங்கள் சிரமதானம் மூலம் துப்புரவுசெய்யும் நடவடிக்கைகள் இன்று கலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன்கீழ் ஊறணிசந்தி தொடக்கம் மட்டக்களப்பு நகர் வரையான வாவிக்கரையின் ஓரங்களில் உள்ள பற்றைகாடுகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.

இந்த சிரமதான பணிகளில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

மட்டக்களப்பு வாவியினை தூய்மையாக வைத்திருக்கவும் மட்டக்களப்பு மாநகருக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று நடவடிக்கைகள் ஏனைய பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.