சட்ட விரோதமான முறையில் மண் ஏற்றிச்சென்ற வாகனம் கைப்பற்றப்பட்டது – ஒருவர் கைது

(தவக்குமார்)

மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வெல்லாவெளி பிரதேசத்தில் நேற்று மாலை போக்குவரத்து பயண அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் விற்பனைக்ககாக மண் ஏற்றி சென்ற நபர் கைதுசெய்யப்பட்டதுடன் வாகனம் பொலிஷாரால் கைப்பற்றப்பட்டது.


கிங்குராணை  14 கட்டையைச் சேர்ந்த வாகனம் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாகவும் அதனை செலுத்திச்சென்ற சாரதி கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியை  பொலிஷாரின் பிணையில் விடுவித்தாகவும் எதிர்வரும் 02.02.2015ம் திகதி இவருக்கு எதிரான வழக்கு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்படவுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஷார் தெரிவித்தனர்.