தூய வனத்து அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

(லியோன்)    
                            
மட்டக்களப்பு கருவப்பங்கேணி தூய வனத்து அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 16.01.2015 வெள்ளிக்கிழமை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது.


இவ் ஆலய திருவிழா திருப்பலி   இன்று ஞாற்றுக்கிழமை 25.01.2015 காலை 07.30 மணிக்கு  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்  கலாநிதி பொன்னையா ஜோசெப் ஆண்டகையினால் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இத் திருவிழா திருப்பலியில் அருட்பணி மொறாயஸ், பங்குதந்தை லெஸ்லி ஜெயகாந்தன் ஆகியோர் இணைந்து  திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்கள்.

திருவிழா திருப்பலியில் இவ்  ஆலய பங்கு மக்களும், அயல் பங்குகளில் இருந்து வருகை தந்த  மக்களும் கலந்து கொண்டு திருப்பலியை  சிற்பித்தார்கள்.

இதனை தொடர்ந்து புனிதரின் திருச்சுருவ  ஆசிருடன் ஆலய கொடி இரக்கப்பட்டு  அன்னதான  நிகழ்வுடன்    ஆலய திருவிழா இனிதாக நிறைவு பெற்றது .