மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட்கிழமை முதல் அரசாங்க உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்யப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்சார்ள்ஸ் என தெரிவித்தார்.
இந்த நெல் கொள்வனவு அரசாங்க அதிபரின் நிதியுதவியில் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கங்கள், மற்றும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் ஊடாகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் மிகக் குறைந்த விலைகளில் தனியார் வர்த்தகர்களினால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருவதனால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் வேளாண்மை பாதிக்கப்பட்டு மிகவும் குறைந்தளவான அறுவடையினை பெற்றுள்ள விவசாயிகள் தமது நெல்லுக்கு சரியான விலை கிடைக்காமையினால் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.
இவ்வாறான விடயங்கள் குறித்து விவசாயிகளது முறைப்பாடுகளையடுத்து இந்த விலைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவுப்பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பனர் இரா.துரைரெட்ணத்தினால் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.